க்ரைம்

தாய் சுற்றுலாவிற்கு உடன் அழைத்துச் செல்லாததால் மாணவி தற்கொலை!! எப்படி தெரியுமா?

பாவூர்சத்திரத்தில் கடந்த 3-ம் தேதி பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tamil Selvi Selvakumar

தென்காசி மாவட்டம், கல்லூத்து  கிராமத்தை சேர்ந்த லிங்கம் மற்றும் விஜயலட்சுமி தம்பதியின் மகள் பொன்னரசி. இவர் பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

சென்னைக்கு சுற்றுலா சென்ற தாய், தன்னையும் உடன் அழைத்து செல்லவில்லை என்பதால், மாணவி பொன்னரசி, மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.  இந்நிலையில், கடந்த 3-ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.