க்ரைம்

காதல் பிரச்சனையால் தற்கொலை செய்த மாணவி... மன உளைச்சலில் காதலனும் தற்கொலை...

காதலி தற்கொலை செய்து இறந்ததால் மன உளைச்சலில் காதலனும் தற்கொலை செய்து கொண்டார்.

Malaimurasu Seithigal TV

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே எரவாஞ்சேரி ராயாத்தமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் மகன் வினித்குமார் (25). அவரும் அருகிலுள்ள பெரியார் திடலை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சுபஸ்ரீயும் காதலித்து வந்தனர். சுபஸ்ரீ அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சில நாட்களுக்கு முன்பு சுபஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்ததை அடுத்து வினித்குமார் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சுபஸ்ரீயின் மரணத்திற்கு வினித் குமார் தான் காரணம் என்று அவரது பெற்றோர் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு சென்று வினித்குமார் குடும்பத்தினரிடம் விசாரித்து வந்தனர்.

காதலி இறந்த சோகத்தில் இருந்த வினித்குமார்  மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். காதலி இறந்ததையடுத்து காதலனும் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.