க்ரைம்

போலி மருத்துவரின் தவறான சிகிச்சை...மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

Malaimurasu Seithigal TV

வாணியம்பாடி அருகே, போலி மருத்துவர், மாணவருக்கு தவறான சிகிச்சையளித்ததால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தோப்பலகுண்டா பகுதியைச் சேர்ந்தவர், சக்கரவர்த்தி. அவரின்  மகன் சூரிய பிரகாஷ்(13). அருகே உள்ளே, எட்டாம் வகுப்பு படித்து வரும் சூரிய பிரகாஷ், சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், நாயன்செருவு பகுதியில், ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுவனை பரிசாதித்த மருத்துவர் கோபிநாத், உடல் நிலை சீராவதற்கு ஊசி போட்டுளார். ஆனால் ஓஊசி போய சில நேரங்களிலேயே, உடல்நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து  திம்மம்பேட்டை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து போலி மருத்துவர் கோபிநாத்தை கைது செய்து அவரிடம்  விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.