க்ரைம்

தென்னந்தோப்பில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. போலீசார் நடவடிக்கை எடுக்காததால் 1098-இல் புகார்!!

மேலூர் அருகே 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  மாவட்ட  குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

Suaif Arsath

மதுரை மாவட்டம் மேலூர் உள்ள ஒரு தென்னந் தோப்பில் நா.கோவில்பட்டியை சேர்ந்த பெருமாள் செல்வி தம்பதியினர் தனது 14 வயது மகளுடன் தங்கி பராமரிப்பு வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பெருமாள் - செல்வி தம்பதியினரின் மகளுக்கு ரமேஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுதொடர்பாக  மாணவியின் பெற்றோர் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக 1098 என்ற குழந்தைகள் நல பாதுகாப்பு எண்ணில் புகார் அளித்தனர். இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.