பேகேப்பள்ளி பகுதியில் வசித்து வரும் சதீஸ்குமார் என்பவர் கடந்த ஆண்டு மின்சார இருசக்கர வாகனம் வாங்கி உபயோகித்து வந்தார்.
இந்நிலையில், தனது 3 வயது மகனுடன் வீட்டின் அருகே வாகனத்தில் பயணித்த போது, இருக்கையின் அடியில் இருந்து புகை வருவது தெரியவந்தது. இதனை கவனித்த சதீஸ்குமார் உடனே வாகனத்தை நிறுத்தி மகனுடன் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார்.
இந்நிலையில், வாகனம் தீப்பிடித்ததில் இருக்கை பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவலறிந்து சென்ற போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.