க்ரைம்

திடீரென தீப்பிடித்த கார்!!! நூலளவில் தப்பிய நபர்!!!

வேலூர் நீதிமன்றம் எதிரே திடீரென கார் ஒன்று தீ பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், அதிஷ்ட வசமாக உயிர் தப்பியது அப்பகுதியில் பெரும் பரபரப்பு உருவாக்கியுள்ளது.

Malaimurasu Seithigal TV

வேலூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் ஒரு வழக்கு தொடர்பாக தனது வழக்கறிஞரை சந்திக்க இன்று வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தபோது தனது டாடா சுமோ வாகனத்தை வெளியே காலையில்  விட்டு சென்றுள்ளார்.

மீண்டும் திரும்ப வந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்து இயக்க முயன்ற போது திடீரென வாகனத்தில் புகை வந்து தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. காருக்கு உள்ளே மாட்டிக்கொண்ட சதீஷை  கார் கண்ணாடியை உடைத்து பொது மக்கள் மீட்டுள்ளனர். இதில் அதிஷ்டவசமாக பாடுகாயம் ஏதும் இன்றி சதீஷ் தப்பியுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத் தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த காரை சதீஷ் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு Second hand ல் வாங்கியுள்ளார்.

கார் தீ பற்றி எரிந்த போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மிதிவண்டி ஒன்றும் எரிந்து நாசமானது.