குஜராத் மாநிலம் சூரத் நகரில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், தன் கணவர் தன்னை வேறுஒருவருடன் மனைவி பரிமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டினை வைத்துள்ளார். தற்போது, இந்த புகார் தொடர்பான அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குற்றச்சாட்டுப்படி, அவர்களின் பொருளாதார நிலை மேம்படவும், புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கவும், வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் கூறி அவரது கணவர் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அவர் தன் கணவர் மீது புகாரளித்துள்ளார். இதனால் அவர் அதிகாரிகளிடம் முறையிட்டு பாதுகாப்பு கோரியுள்ளார்.
தகவலின்படி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சில குழுக்கள் சமூக வலைதளங்களில் போலி பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி, தம்பதியராக புகைப்படங்களைப் பகிர்ந்து உறுப்பினர்களை இணைப்பதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதில் பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தம்பதிகளும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள் பலரும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர் தனது வீடியோவில் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தன்னிடம் சாட் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்கள் இருப்பதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், இந்த புகார் தொடர்பான வழக்கு தற்போது காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளதாகவும், குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்