சமீபத்தில் கணவன் மனைவி மத்தியில் நடக்கும் சண்டைகள் எல்லாம் பெரும்பாலும் மரணத்தில் தான் போய் முடிகிறது. மக்களிடையே பொறுமை நிதானம் இல்லாமல், தேவையற்ற சந்தேகங்கள் குடும்பங்களின் நிம்மதியை குலைக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உமா மகேஸ்வரியை தலையை கணவனே துண்டித்து படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கணவர் தமிழ்செல்வனை ஏரல் காவல்துறையினர் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இருவரும் நன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்செல்வன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், தனது வீட்டில் தான் இல்லாத நேரத்தில் மனைவியை கண்காணிப்பதற்காக வீடு முழுவதும் வீட்டிற்கு வெளியேயும் கேமரா அமைத்து தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே இருவருக்கும் சண்டை முற்றியுள்ளது. தமிழ்ச்செல்வன் நேற்று திடீரென வீட்டிற்கு வந்து இரவில் வீட்டில் இருந்த மனைவி உமாமகேஸ்வரியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரல் காவல் நிலைய போலீசார் உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய தமிழ்செல்வனை தேடி வருகின்றனர் . தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.