செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியில் உள்ள சபாபதி நகரில் நான்கு வீடுகள் கொண்ட குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது,இதில் வீட்டின் உரிமையாளர் கணபதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு வீட்டில் வசித்துக் கொண்டு மற்ற மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளார், இதில் ஒரு வீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மணிகண்டன் என்பவர் திருமணம் ஆகி குடும்பத்துடன் கணபதி வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
மணிகண்டன் அதே வீட்டில் சுமார் ஐந்து வருடமாக வாடகைக்கு இருந்து வருகிறார், எனவே கணபதி மற்றும் அவர்களது குடும்பத்துடன் நல்ல உறவில் இருந்து வந்துள்ளார், ஸ்விக்கியில் உணவு டெலிவரி வேலை செய்யும் மணிகண்டனுக்கு வாடகைக்கு இருந்து வரும் வீட்டின் உரிமையாளர் கணபதியின் மகள் 23 வயது பெண்ணை மணிகண்டன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது,
இந்தநிலையில் நேற்று காலை வீட்டு உரிமையாளர் கணபதியின் மகள் அவரது வீட்டுக்கு வெளியே அமைந்திருக்கும் குளியல் அறைக்கு சென்று குளித்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த மணிகண்டன் அப்பெண் குளிப்பதை யாருக்கும் தெரியாமல் சென்று செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். குளிக்கும் போது ஜன்னல் கண்ணாடி வழியே வித்தியாசமாக இருப்பதாய் உணர்ந்த மாணவி யாரோ தன்னை வீடியோ எடுப்பதாக சுதாரித்து கொண்டு “யாரோ தன்னை செல்போனில் வீடியோ எடுப்பதாக அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார்” பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வரத்து தந்தை மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். பின்னர் மணிகண்டனை மடக்கி பிடித்து பொதுமக்கள் அவரை அடித்து உதைத்து உள்ளனர்,
இதையடுத்து மணிகண்டனை பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது தான் “தனது வீட்டு உரிமையாளரின் மகளை ஒருதலையாக காதலித்து வருகிறேன் இதனால் அவர் குளிக்கும் போது அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார்” இதையடுத்து பல்லாவரம் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.