Ryan McCaffery sentenced 
க்ரைம்

சிறுமிகளை ஏமாற்றி ஆபாச பேச்சு.. அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி அத்துமீறல்! சிறுவன் என்று கூறி ஆசிரியர் விரித்த வலை

அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான இளம் சிறுமிகளை தனது வலையில் விழவைத்து, அவர்களிடம் நிர்வாணப் புகைப்படங்களை அவரோடு பரிமாறிக்கொள்ளக் கோரியுள்ளார்.

Vinvizhi Leninton

இணையத்தில் பதின்ம வயது சிறுவனை போல நடித்து, சிறுமிகளிடம் அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பச் சொல்லிய குற்றச்சாட்டில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் கால்பந்துப் பயிற்சியாளருக்கு கடந்த புதன்கிழமை (அக் 21) மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியரும், ஜூனியர் வார்சிட்டி கால்பந்து பயிற்சியாளருமாக இருந்து வருபவர்தான் 38 வயதானவர்தான் ரியான் மெக்காஃபெரி. இவர் ஸ்னாப்சாட்டைப் பயன்படுத்தி தன்னை ஒரு பதின்மவயது சிறுவனைப்போல அடையாளப்படுத்தியுள்ளார். இதனை பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான இளம் சிறுமிகளை தனது வலையில் விழவைத்து, அவர்களிடம் நிர்வாணப் புகைப்படங்களை அவரோடு பரிமாறிக்கொள்ளக் கோரியுள்ளார்.

டிசம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரையிலான காலகட்டத்தில், அந்த வக்கிர குணம் கொண்ட ஆசிரியர், ஏராளமான சிறுமிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பின் புகைப்படத்தினை அனுப்பி, பதிலுக்கு சிறுமிகளிடமிருந்து நிர்வாணப் புகைப்படங்களைக் கோரியதோடு, பிற தளங்களில் அந்த சிறுமிகளின் ஆபாசப் படங்களையும் பகிர்ந்ததாகவும், சிலர் அவற்றை வாங்கியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 2024-ல், மெக்காஃபெரி 'கிக்' என்ற செய்தியனுப்பும் செயலியில் குழந்தைகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் உள்ளடக்கங்களைப் பகிர்ந்துள்ளார் என்று, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம், மாநில காவல்துறையின் குழந்தைகளுக்கு எதிரான இணையக் குற்றங்கள் தடுப்புப் பணிக்குழுவிற்குத் தகவல் அளித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவலர்கள் 2025 ஜனவரியில் மெக்காஃபெரியின் 'ரிட்ஜ்' இல்லத்தில் சோதனை நடத்தி, பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஒரு தடயவியல் பகுப்பாய்வின் மூலம் அந்த அருவருப்பான ஸ்னாப்சாட் செய்திகள் வெளிகொண்டுவரப்பட்டுள்ளது. மெக்காஃபெரி இன்னும் அதிகமான மனதை உலுக்கும் பல படங்களையும் காணொளிகளையும் பார்க்கவும், வாங்க முயன்றதும், அதனை மற்றொரு பயனருடன் பகிர்ந்துகொண்டதும் தெரியவந்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், மெக்காஃபெரி இதுபோன்ற முகம் சுளிக்கும் செயல்களுக்காக நியூ ஜெர்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பிப்ரவரி 2025-ல் ரிவர்ஹெட் உயர்நிலைப் பள்ளியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பின்னர், நியூ ஜெர்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதே முறையற்ற நடத்தைக்காக, இந்த முறை லாங் ஐலாந்தில் உள்ள மாநில காவல்துறையினரால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம், மெக்காஃபெரி, தனது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புகொண்டுமுள்ளார்.

கடந்த மாதம் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பு, அவர் ஏற்கனவே நியூ ஜெர்சியில் இதேபோன்ற குற்றங்களை ஒப்புக்கொண்டு, அங்கு அவர் பிப்ரவரியில் ஐந்தாண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மெக்கஃபெரி, சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஐந்து ஆண்டுகள் கண்காணிப்பையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்