க்ரைம்

சிதம்பரத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!

தொடரும் மாணவிகள் மீதான பாலியல் தொல்லை..!

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே சேதூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவியை அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அசோக்குமார் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆசிரியர் அசோக்குமாரை தேடி வருகின்றனர்.