accust and old womens  
க்ரைம்

“அடுத்தடுத்து காணாமல் போன மூதாட்டிகள்” - புதரில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்… பிலிம் நகரை அதிர வைத்த சைக்கோ கில்லர்!

தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை கொலை செய்து...

Mahalakshmi Somasundaram

தெலுங்கானாவில் மிக பிரபலமான பகுதியாக கருதுபடுவது ஜூபிலி ஹில்ஸ். செல்வந்தர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அதிகம் வாழும் இந்த பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தெலுங்கானாவையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த மங்கம்மா என்ற மூதாட்டி கடந்த மாதம் (மார்ச் 14) ஆம் தேதி கடைக்கு சென்றபோது காணாமல் போன நிலையில் இது குறித்து அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்தார். எனவே வழக்கு பதிவு செய்த பிலிம் நகர் காவல்துறையின் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் (மார்ச் 19) ஆம் தேதி யதம்மா என்ற மூதாட்டி காணாமல் போன நிலையில் இது குறித்தும் வழக்குப்பதிவு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது இரு மூதாட்டிகளையும் கடைசியாக ஒரே பதிவெண் கொண்ட கார் அழைத்து சென்றது தெரியவந்தது. எனவே போலீசார் அந்த காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரான மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

yathamma and mangamma

அப்போது மருத்துவர் அளித்த தகவலின் படி அவரது கார் ஓட்டுநர் வாசு என்பவரை கைது செய்து விசாரித்ததால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்த வாசு சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்த நிலையில் மருத்துவரிடம் ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இருப்பினும் அவரது பண தேவை பூர்த்தி அடையாத நிலையில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை கொலை செய்து நகைகளை திருடும் ஒரு கொடூர திட்டத்தை திட்டியுள்ளார்.

அதன் படி கடந்த மதம் தனியாக வெளியில் சென்ற யதம்மா மற்றும் மங்கம்மாவை உதவி செய்வதாக ஏமாற்றி காரில் அழைத்து சென்று அவர்களை கழுத்தை இருக்க கொலை செய்து அவர்களின் நகைகளை கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து அவர்களது உடலை புறநகரில் உள்ள புதர்களில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. எனவே வசுவின் தகவல் படி மூதாட்டிகள் உடல்களை கைப்பற்றி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதே போல வாசு பல மூதாட்டிகளை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மூதாட்டியை குறிவைத்து கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.