Telangana Farmer Murder Case 
க்ரைம்

“சித்தியுடன் தனிமையில் இருந்த 19 வயது வாலிபர்” - பார்க்க கூடாததை பார்த்த கணவன்.. கிணற்று அருகே கொல்லப்பட்ட பின்னணி!

இதற்கிடையில் இவர்கள் நெருங்கி பழகுவதை கவனித்து வந்த தான்னய்யா ஒரு நாள் இருவருவரும் தனிமையில் இருப்பதை..

Mahalakshmi Somasundaram

தெலுங்கானா மாநிலம்,யதாத்ரி புவனகிரி மாவட்டம் சௌதுப்பல்  பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடைய தான்னய்யா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாராத என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமானமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. தான்னய்யா. அதே பகுதியில் உள்ள அவரது நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சாரதாவிற்கு பல ஆண்களுடன் திருமணத்திற்கு மீறிய பழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தான்னய்யாவின் அண்ணன் மகனான 19 வயதுடைய சிவா என்ற வாலிபர் அடிக்கடி தான்னய்யா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது சாரதாவிற்கும் சிவாவிற்கு இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய பழக்கமாக மாறியுள்ளது. பின்னர் இருவருவரும் அடிக்கடி வீட்டில் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர்கள் நெருங்கி பழகுவதை கவனித்து வந்த தான்னய்யா ஒரு நாள் இருவருவரும் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் “என் பொண்டாட்டி உனக்கு அம்மா மாதிரி டா ஒழுங்கா இருந்துக்கோ” என கண்டித்துள்ளார்.

இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் கடந்த (அக் 23) ஆம் தேதி சாரதா மற்றும் சிவா ஆகிய இருவரும் விவசாய நிலத்தில் இருந்த கிணற்றுக்கு அருகில் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது விவசாயம் செய்வதற்காக அங்கு சென்ற தான்னய்யா சாரதாவை பார்க்க கூடாத நிலையில் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த கட்டையை எடுத்து சிவாவை தாக்க முயன்ற நிலையில் தான்னய்யாவின் கால்களை பிடித்த சாரதா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Telangana Farmer Murder Case

இதற்கிடையே சிவா அங்கிருந்த கல்லில் தனது சித்தப்பா தான்னய்யாவின் தலையை மோதி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தான்னய்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிவா அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் கொலையை மறைக்க நினைத்த சாரதா தான்னய்யாவின் அண்ணன் ஸ்ரீனு என்பவருக்கு போன் செய்து தான்னய்யா மாயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ஸ்ரீனு பல்வேறு இடங்களில் தான்னய்யாவை தேடிய போது அவர் விவசாய நிலத்தில் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.

எனவே ஸ்ரீனு உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தான்னய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து சாரதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சாரதா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிவாவுடன் சேர்ந்து தான்னய்யாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். எனவே தனிப்படை அமைத்து சிவாவை கைது செய்த போலீசார் சாரதா மற்றும் சிவாவை கடந்த (அக் 25) ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்