க்ரைம்

“காதலனை கொன்று பெட்டியில் பூட்டி வைத்த கன்னட நடிகை” - கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த கொடூரம்… குடியிருப்பு முழுவதும் வீசிய துர்நாற்றம்!

பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில்...

Mahalakshmi Somasundaram

தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பண்ட்லகுடா பகுதியில் வசித்து வந்தவர் 26 வயதுடைய ஊர்வசி என்ற பிந்து. இவர் கன்னட திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் நடத்தி வந்ததோடு சில தொலைக்காட்சி தொண்டர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் 29 வயதுடைய கிருஷ்ணா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணாவிற்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பிந்து அவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற இடத்தில் பிந்துவுக்கு வினய் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிந்து கிருஷ்ணாவிற்கு தெரியாமல் தொடர்ந்து வினய் குமாருடன் பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர்.

இதற்கிடையில் பிந்து வினய் குமாரனுடன் தொடர்ந்து வாழ நினைத்து அதற்கு தடையாக உள்ள கிருஷ்ணாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர் அதன் படி கடந்த (பிப் 20) ஆம் தேதி கிருஷ்ணாவை வீட்டிற்கு மது அருந்த அழைத்து வந்த பிந்து அவர் மது அருந்தி சுயநினைவு இழந்த நிலையில் வினய் குமாருடன் சேர்ந்து அவரை அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கின்றன. பின்னர் கிருஷ்ணாவின் உடலை வீட்டில் இருந்த ஒரு பெட்டியில் போட்டு மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். இதனை தொடர்ந்து கொலை நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை பரிசோதனை செய்த போது பெட்டியில் கிருஷ்ணா உடல் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் காதலனுடன் சேர்ந்து அந்த வீட்டில் வசித்து வந்த பிந்து கிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து தனிப்படை அமைத்து பிந்து மற்றும் வினய் குமாரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.