க்ரைம்

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பயங்கர விபத்து... சிசிடிவி வெளியீடு...

நாமக்கல் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

நாமக்கல் அடுத்த வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமிஒளி, ஒலி அமைப்பகம் வைத்துள்ள இவர் நேற்று மதியம் சேந்தமங்கலத்தில் இருந்து வடுகப்பட்டிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அவர் சாலையை கடக்க முற்பட்ட போது நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று குப்புசாமி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குப்புசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், விபத்து காட்சிகள் அங்குள்ள சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.