க்ரைம்

சாதியை காட்டி விலகிய காதலன்... ஏமாற்றிய விரக்தியில் இளம்பெண் தற்கொலை...

ஈரோடு மாவட்டம், திங்களுர் அருகே காதலன் ஏமாற்றியதால் விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்.  இவரது மகள் கலையரசி  ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் வெட்டயன் கிணறு பகுதியில் உள்ள தனியார்  நிறுவனத்தில் கலையரசி வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த முத்துகுமாருக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலையரசி வேறு சமூகத்தை சார்ந்தவர் என அறிந்த முத்துகுமார், அவரிடமிருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து கலையரசிக்கும் முத்துகுமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இருவரும் இருசக்கர வாகனத்தில்  பங்களாபுதூர் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் வீடு திரும்பிய கலையரசி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் முத்துகுமாரை கைது செய்தனர்.