க்ரைம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கொன்ற கொடூரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரப்பன். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி குண்டம்மாள் , 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அண்மையில் இவர் அங்குள்ள மதுக்கடை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து குண்டம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். 

அறிக்கையில் மாரப்பனின் தலையில் கூர்மையான ஆயுதம்  கொண்டு தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குண்டம்மாளிடம் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த சிவசங்கருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சிவசங்கருக்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதற்கு கணவர் இடையூறாக இருந்ததால் சம்பவத்தன்று, சிவசங்கர் மாரப்பனை அழைத்து சென்று மதுக்குடிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் போதையில் இருந்த கணவரை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.