க்ரைம்

பள்ளத்தில் தவறி விழுந்த கார்...உள்ளே இருந்த டிரைவரின் நிலைமை என்ன?

Tamil Selvi Selvakumar

பள்ளத்தில் கார் விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபி - ஈரோடு சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.  அதே போன்று கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையம் பகுதியிலும்  பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது.  

இந்நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இது குறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.