women harrsment  
க்ரைம்

“பெற்ற மகளுக்கு குழந்தை கொடுத்த தந்தை..” பிரசவம் வரைக்கும் உண்மையை மறைத்த சிறுமி!? திடுக்கிடும் தகவல்கள்..!

அவருக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தையை ‘அம்மா தொட்டில் குழந்தை’ முகாமில் சேர்த்தும் விட்டுள்ளார்...

மாலை முரசு செய்தி குழு

மனிதர்களின் வக்கிர மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நெஞ்சை உலுக்கும் விதமாக தினம் தினம் அரங்கேறி வருகின்றன. 

அதுவும் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின்  அறியாமை, இயலாமை, பயம் ஆகியவற்றை குடும்பத்தினரே பயன்படுத்திக்கொள்ளும் ஒரு மோசமான சூழலில்தான் நாம் வாழ்கிறோம். அப்படி பதைபதைக்கும் சம்பவம் தான், கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதி அருகே தேங்காய் வியாபாரி தனது மனைவி மற்றும் மகன் மகள் ஆகியோரோடு வாழ்ந்து வந்துள்ளார். இந்த வியாபாரிதான் எந்த தகப்பனும் செய்யக்கூடாத ஒரு கீழ்த்தரமான வேலையை செய்துள்ளார். இவரின் 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள 12 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தையை ‘அம்மா தொட்டில் குழந்தை’ முகாமில் சேர்த்தும்விட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துமனைக்கு விரைந்துள்ளனர். அங்கே சிகிச்சையில் இருந்த சிறுமியுடன் தந்தை மட்டுமே உடன் இருந்துள்ளார்.

விசாரணையின்போது, சிறுமி ‘தான் காதலித்த ஆண் நபர் தான் இதற்கு காரணம்’ என்றும் எந்த சூழலிலும், அந்த பையனின் பேரை சொல்லமாட்டேன் என சொல்லியுள்ளார். தந்தையிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரும் முன்னுக்கு பின் முரணாகவே பதில் அளித்துள்ளார்.

 இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விரிவான விசாரசணையை முன்னெடுத்துள்ளனர். மாணவிக்கு பலகட்ட உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னர் அவர் சொன்ன தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது. அந்த தேங்காய் வியாபரிதான் தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், மேலும் மாணவி கர்ப்பமடைந்த விஷயம் மனைவிக்கும் மகனுக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, இவரே திருவனந்தபுரம் அழைத்துவந்து பிரசவத்தையும் முடித்துள்ளார். மனைவியும் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் பெரிய பிரச்சனையாகி விடும் என பயந்து, தந்தையின் குற்றத்தை மறைத்துள்ளார்” இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், அந்த வியாபாரியை போக்சோ உள்ளிட்ட பல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தந்தையே தனது மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.