க்ரைம்

இளைஞர்கள் கஞ்சா குடிப்பது போல ரீல்ஸ் வெளியீடு

கஞ்சா போதையில் விழுந்து கிடப்பது போல இன்ஸ்டாகிராம் ரீல்ல் செய்து வெளியிட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்ட தேவஸ்தான சிறுவர் பூங்காவில் மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சில இளைஞர்கள் கஞ்சா குடிப்பது போலவும் ,கஞ்சா போதையில் விழுந்து கிடப்பது போலவும் அவர்களின் நண்பரை தூக்கிச் செல்வது போலவும் ரீல்ஸ் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பழனி நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.