க்ரைம்

மலம் கழிக்க சென்ற 20 வயது பெண்ணை 5நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பல்...

பீகார் மாநிலம்  20 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

பீகார் மாநிலம் வைஷாலியில் 20 வயது இளம் பெண் ஒருவர் டிசம்பர் 20 ஆம் தேதி மாலை, சிறுமி வீட்டில் இருந்து மலம் கழிக்க வெளியில் சென்றுள்ளார். அப்பொழுது, அந்த வழியாக வந்த கும்பல்  பெண்ணை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

 பின்னர் 20 வயது இளம் பெண்ணை ஐந்து நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணியளவில் ஆடு மேய்க்கச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த பெண், தண்ணீரில் சடலம் கிடப்பதைப் பார்த்துள்ளார். ​உடனே, அங்கு கூடியிருந்த மக்கள், பெண்ணின் உடலை அடையாளம் காட்டுவதற்காக பெண்ணின் தாயை அழைத்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது தனது மகள் தான் என உறுதி ஆனது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். மேலும் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஹாஜிபூர் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.