க்ரைம்

பல பெண்களுடன் தொடர்பு... தடையாக இருந்த மனைவியை அடித்தே கொன்ற கணவன்...

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத் இவருடைய மனைவி ஹேமாவதி வயது 25. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான 6 மாதத்தில் இருந்தே கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கூட காவல் நிலையத்தில் இவர்களுடைய பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு சமாதானம் செய்து காவல்துறை அனுப்பியுள்ளனர்.

அதன் பிறகு ஹேமாவதி தன்னுடைய கணவனின்  செல்போனை எடுத்து பார்க்கும் போது வினோத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக வினோத் பல பெண்களுடன் வீடியோ காலில் பேசுவதும் அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்வதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஹேமாவதி வழுக்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக ஹேமாவதியின் அண்ணனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து வந்த ஹேமாவதியின் அண்ணன் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்தபோது ஆபத்தான நிலையில் இருந்துள்ளார் ஹேமாவதி. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறவே கீழ்ப்பாக்கம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஆர்டிஓ விசாரணைக்கு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக பேட்டி அளித்த ஹேமாவின் அண்ணன் ஜானகிராமன் கூறுகையில்,

தனது தங்கையை வரதட்சணை கொடுமையால் திருமணமான முதல் தொந்தரவு செய்து வந்ததாகவும், வினோத்திற்கு பல பெண்களிடம் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதற்கெல்லாம் என் தங்கை உடந்தையாக இல்லை என்ற காரணத்திற்காக நேற்று கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையிலும், ஆர்.டி.ஓ. அதிகாரிகளின் விசாரணையின் பிறகுதான் உண்மை என்ன தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.