க்ரைம்

போதையில் ரயில் ஏற முயற்சித்த நபரின் கால் துண்டான சம்பவம்..!

Malaimurasu Seithigal TV

சென்னை திருவொற்றியூரில் மதுபோதையில் ரயிலில் ஏற முயற்சித்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சுவாமிநாதன், வழக்கம் போல வேலையை முடித்து விட்டு, மது அருந்தியதோடு விம்கோ ரயில் நிலையத்தில், ரயில் ஏற முயற்சித்துள்ளார். போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சுவாமிநாதனின் கால் ரயில் சக்கரத்தில் மாட்டி துண்டானது. இதனையடுத்து அவரை மீட்ட ரயில்வே போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.