க்ரைம்

மிலிட்டரி கணவர்... வேறொருவருடன் தொடர்பில் மனைவி.. செதில் செதிலாக வெட்டி சிதைத்த மாமனார்...

திருப்பத்தூரில் மருமகளை மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியை சார்ந்த மணி மகன் சிவா (40) ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு கந்திலி குமிடிக்கான்பட்டி பகுதியை சார்ந்த முருகேசன் மகள் முருகம்மாளை திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு மதுனிஷா(11) ரோகித் (8) இரு குழந்தைகள் உள்ளன. முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மேலும் முருகாம்மாளுக்கு கள்ளக்காதல் இருப்பதாகவும் கணவன் மற்றும் மனைவிக்கு கருத்து வேறுபாடு உள்ளது. எனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் முருகம்மாள் கடந்த மூன்று வருட காலமாக அவருடைய அப்பா வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

முருகம்மாளின் மாமனாரான மணியுடன், இந்த வீடு எனக்கு சொந்தம். நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று முருகாம்மாள் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக மாமனார் மற்றும் மருமகள் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. இந்த நிலையில் முருகம்மள் சமையலறையில் இருக்கும் பொழுது மாமனாரான மணி தன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் மணி தான் வைத்திருந்த சைக்கிளில் சென்று நாட்றம்பள்ளி போலீசாரிடம் தன் மருமகளை நான் வெட்டி விட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.

மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனைக்காக மாமனாரே மருமகளை வெட்டி கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.