க்ரைம்

பிரபல ரவுடியை வெட்டி கொலை.. பிறந்த நாளை இறந்த நாளாக மாற்றிய மர்ம கும்பல்!!

திருச்சி அருகே பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்து மாலை போட்டு விட்டு சென்ற கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Suaif Arsath

ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கௌரி சங்கர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மர்ம நபர் ஒருவர் கௌரி சங்கருக்கு போன் செய்து பிறந்தநாள் ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு அவர், தான் வெங்ககுடியில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் அங்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல் கௌரிசங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அவர் மீது பூ மாலையை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது.  இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கௌரி சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் எடதெருவை சேர்ந்த கார்த்திக் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட 7 பேர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.