க்ரைம்

பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்...காரணம் என்ன..?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கணவன் இறந்த சோகத்தில்,  கைக்குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

துறையூர் அடுத்த பச்சமலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த கார்த்திக்கிற்கு ஒன்றை வயதில் குழந்தையும் மனைவியும் இருந்தனர். இதனையடுத்து அவருடைய நினைவு நாளையொட்டி, அவரது மனைவி நிஷா பெரும் சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நிஷா கணவன் நினைவில், குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தானும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக வந்த பெற்றோர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிஷாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தாய் நிஷாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.