க்ரைம்

சமையல் சிலிண்டரை திருடிச்செல்லும் மர்ம நபர்...சிசிடிவி வெளியாகி வைரல்!

Tamil Selvi Selvakumar

வடசென்னையில் கொருக்குபேட்டையில் மர்ம நபர் ஒருவர் இருசக்கரவாகனத்தில் சென்று சமையல் சிலிண்டரை திருடிச்செல்லும் சிசிடிவி வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த கொருக்குப்பேட்டை பகுதியில் சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர், ரிக்‌ஷா வண்டியை நிறுத்தி விட்டு சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். 

அப்போது அவ்வழியே இருசக்கரவாகனத்தில் சென்ற மர்ம நபர் ஒருவர், ரிக்‌ஷா வண்டியில் இருந்த சமையல் சிலிண்டரை, தனது இரு சக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். 

இந்நிலையில் இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததால், இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.