க்ரைம்

திருமணம் ஆன முதல்நாளே காதல் மனைவியை கைவிட்டு சென்ற கணவன்!! சேர்த்துவைக்கக் கோரி தர்ணாவில் இறங்கிய இளம்பெண்

திருமணம் செய்த சிறிது நேரத்திலேயே ஏமாற்றிவிட்டு தப்பிச்சென்ற காதல் கணவனுடன் சேர்த்துவைக்கக் கோரி திருவள்ளூரில் இளம் பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

Tamil Selvi Selvakumar

திருவள்ளூர் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் 23 வயது மகள் லட்சுமியும், அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தம்மன் என்பவரின் மகன் சின்னராசுவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதில் இரண்டு முறை கர்ப்பமடைந்த லட்சுமி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சின்னராசுவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார்.

இதனையடுத்த கடந்த மாதம் 8-ம் தேதி லட்சுமியை திருமணம் செய்த சின்னராசு அன்றே லட்சுமியை விட்டுவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கணவனின் வீட்டின் முன்பு அமர்ந்து லட்சுமி தர்ணாவில் ஈடுபட்டார்.