கீரனூர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் கருப்பையா. இவர் கடந்த 18-ம் தேதி மது போதையில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சடலமாக கிடந்தது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தந்தையின் அரசு பணியை பெறவேண்டிய ஆசையில், தந்தைக்கு அவரது மகன் பழனியே மதுவில் விஷம் வைத்தது தெரியவந்தது.
மேலும் விஷம் அருந்திவிட்டு உயிருக்கு போராடிய போது, தந்தை எனும் பாராமல் அவரது நெஞ்சில் ஏறி மிதித்து கொன்றதும் அம்பலமானது. இதற்கு உதவியாக இருந்த பழனியின் நண்பர் ஆனந்தன் உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.