க்ரைம்

இளம் பெண்ணை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபர்!

கடலூர் மாவட்டத்தில் இளம் பெண்ணை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Suaif Arsath

விருதாச்சலம் அருகே உள்ள கார்மாங்குடி வெள்ளாற்றின் பகுதியில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வலி தாங்க முடியாமல் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பெண் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து அடையாள அட்டையை கண்டுபிடித்தனர். பின்னர், அது கார்மாங்குடி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் அட்டை என தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள வாலிபர் ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.