க்ரைம்

திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டல் விடுத்த கள்ளக்காதலன்..! முகநூல் நண்பர் உதவியுடன் கொலை செய்த இளம் பெண்..!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கள்ளக்காதலனை, முகநூல் நண்பர் உதவியுடன் கொலை செய்த இளம் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tamil Selvi Selvakumar

ஐதராபாத் அமீர்பேட்டையை  சேர்ந்த ஸ்வேதா பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒராண்டிற்கு முன்னர் திருமணமான நிலையில், சுவேதாவுக்கும் புகைப்பட கலைஞரான அஸ்ம குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், இல்லையென்றால் தனிமையில் இருந்தபோது எடுத்த புகை படங்கள், வீடியோக்களை உன்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என கூறி இளைஞர், ஸ்வேதாவை மிரட்டி வந்தார். இதனால் இளைஞரை கொலை செய்ய திட்டமிட்ட பெண் அவரை பிரசாந்த் ஹில்ஸ் என்னும் பகுதிக்கு வரவழைத்தார். அங்கு தனது முகநூல் நண்பர் அசோக் என்பவருடன் சேர்ந்து இளைஞரை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பி சென்றார்.  

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். இதனிடையே அஸ்மகுமாரை யாரோ தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்கள் என கூறி வந்த ஸ்வேதாவிடம், போலீசார் விசாரணை நடத்தியபோது அசோக் மற்றும் கார்த்திக் ஆகியோரின் துணையுடன் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஐதராபாத் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.