க்ரைம்

“காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்” - தப்பியோட்டம்.. உடந்தையாக இருந்த பெற்றோர் கைது!

பெற்றோர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ்...

Mahalakshmi Somasundaram

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்க தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியுடன் ஒரே பள்ளியில் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன், அவரை காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகளால் பேசி நம்ப வைத்து திண்டுக்கல் பகுதிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல் பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியையும், சிறுவனையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறுவன் போலீசாரிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டு தேனிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் தன்னை திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை அழைத்துச் சென்ற விவகாரத்தில் சிறுவனின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிறுவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படும் சிறுவன், அவரது பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.