Thirukazhukundram Minor Death Case 
க்ரைம்

“சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த திருமணமான வாலிபர்” - இரவு நேரங்களில் வீட்டிற்குச் சென்று டார்ச்சர்.. விஷமருந்தி உயிரிழந்த மாணவி!

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி (நவ 22) ஆம் தேதி உயிரிழந்தார்...

Mahalakshmi Somasundaram

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி, தொடர்ந்து தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 24 வயது திருமணமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரின் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி விஷமருந்தி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி டீஜேஹந்தையை பிரிந்து தாயுடன் தனியாக வசித்து வந்தார்.

சிறுமியின் தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு இரவு வேளைக்கு செல்லும் நிலையில் இரவு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம் என சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து நோட்டமிட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 24 வயதுடைய அலெக்ஸ் சிறுமியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என வறுபுறுத்தி வந்திருக்கிறார். அலெக்ஸ்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுமி பலமுறை மறுத்து அவர் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தினமும் இரவும் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து வந்த நிலையில் அலெக்ஸ்ஸை அக்கம் பக்கத்தினர் அடித்து துரத்தியதாக சொல்லப்படுகிறது. இருப்பினு தொடர்ந்து அலெக்ஸ் சிறுமியை திருமணத்திற்கு வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, கடந்த (நவ 21) ஆம் தேதி விஷமருந்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சிறுமியை மீட்ட பெற்றோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி (நவ 22) ஆம் தேதி உயிரிழந்தார்.

இதற்கிடையே, சிறுமியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை தெரிவித்து வழக்குப்பதிவு செய்யாமல், பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததை பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், போலீசாரைக் கண்டித்தும், சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான நபரைக் கைது செய்யக் கோரியும் நேற்று முன்தினம் (நவ 23) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பெற்றோரை சமாதானம் செய்து அவர்கள் கூறிய தகவலின் படி சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருக்கழுக்குன்றம் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸை கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்