திருவள்ளூர் மாவட்டம், இருளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய இளையராஜா. இவர் தனியார் தொழிற்சாலையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாந்தி என்பவருக்கு கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என சாந்தியை அவரது மாமிமியார் மற்றும் உறவினர்கள் குறை கூறி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இளையராஜாவின் தம்பியான இசைமேகம் என்பவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமான ஆறே மாதத்தில் இசை மேகத்தின் மனைவி கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சாந்தியின் மாமியார் இளைய மருமகளுடன் ஒப்பிட்டு சாந்தியை தொடர்ந்து திட்டி அசிங்கப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த சாந்தி இசைமேகத்தின் மனைவியை அடிக்கடி வசை படி வந்திருக்கிறார். மேலும் வேலை செய்யவில்லை என் திட்டி தீர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இசை மேகத்திற்கும் அவரது அண்ணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலையில் அதனை இளையராஜா சமாதானம் செய்து இருவரையும் விலக்கி விடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதே போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் சாந்தி இசை மேகத்தின் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசை மேகம் அவரது அண்ணியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் இசை மேகம் வீட்டில் இருந்த கத்தியால் சாந்தியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய இசை மேகத்தின் மீது கொலை வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தம்பியே அண்ணனின் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்