thiruvallur suicide 
க்ரைம்

“திருமணமான 20 நாளில் இளைஞர் தற்கொலை” - தனிக்குடித்தனம் செல்ல தகராறு செய்த மணப்பெண்.. நள்ளிரவில் பெண்ணுடன் இருந்த மர்ம நபர்கள்!

திருமணமான இரண்டு நாட்களிலேயே ஜெயஸ்ரீ தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்றும் சொத்துக்களை பிரித்து தனியாக வாங்கி வருமாறு தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை சிடிஎச் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். கார்த்திக்கிற்கு அவரது உறவுக்கார பெண்ணான புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஜெயஸ்ரீயை இருவீட்டாரும் சேர்ந்து கடந்த (செப் 04) திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான இரண்டு நாட்களிலேயே ஜெயஸ்ரீ தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்றும் சொத்துக்களை பிரித்து தனியாக வாங்கி வருமாறு தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.

எனவே கார்த்திகேயனின் தாய் இளம் தம்பதிகள் என்பதால் தனி குடித்தனம் வைக்க முடியாது என கூறி அவர்களது வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டில் தம்பதிகளை தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த (செப் 22) ஆம் தேதி அன்று கார்த்திகேயன் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஜெயஸ்ரீ தனது துணிகள் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.

இதனை அடித்து வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய கார்த்திகேயன் மனைவி வீட்டில் இல்லாத காரணத்தால் அவரது மாமியார் வீட்டிற்கு சென்று ஜெயஸ்ரீ குறித்து கேட்டுள்ளார். அதற்கு ஜெயஸ்ரீயின் தாய் அவர் வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகாரளித்தார். ஜெயஸ்ரீயின் செல்போன் சிக்னலை வைத்து அவர் பட்டாபிராம் பகுதியில் இருப்பதாக போலீசார் கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளனர்.பின்னர் பட்டாபிராம் பகுதிக்கு கார்த்திகேயன் மற்றும் ஜெயஸ்ரீயின் குடும்பத்தார் சென்று பார்த்தபோது அங்கு ஜெயஸ்ரீ வேறு ஒருவருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து கார்த்திகேயன் ஜெயஸ்ரீயை சமாதானம் செய்து தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அன்று இரவே கார்த்திகேயன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகே கொண்டார். ஆனால் கார்த்திகேயனின் பெற்றோர்கள் சிசிடிவி ஆதாரத்துடன் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். அந்த சிசிடிவி காட்சியில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் கார்த்திகேயன் தூக்கிட்டு கொண்ட நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றனர். மேலும் சிறிது நேரம் கழித்து அந்த நபர்களுடன் ஜெயஸ்ரீயும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருமணமான 20 நாட்களில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.