க்ரைம்

வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்த உதவி சிறப்பு ஆய்வாளர்: கார், இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து  எரித்த கள்ளக்காதலி...

கள்ளக்காதல் விவகாரத்தில் திருவண்ணாமலையில் உதவி சிறப்பு ஆய்வாளரின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை  நகர காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சுந்தர். மனைவியை பிரிந்த இவர், தனது இரு மகன்களுடன் திருவண்ணாமலை மத்தளாங்குளத் தெருவில் வசித்து வருகிறார். சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர்,  சுமதியுடன் பழகி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அடுத்ததாக லட்சுமி  என்ற பெண்ணுடன் சுந்தர் பழகியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுமதி, சுந்தரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது  பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த  காட்சியை கொண்டு, சுமதியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.