க்ரைம்

தூத்துக்குடி கிராம சபை கூட்டம்... படம் எடுத்தவருக்கு அடி- உதை..!

Malaimurasu Seithigal TV

திருச்செந்தூர் அருகே கிராம சபை கூட்டத்தை செல்போனில் வீடியோ எடுத்த ஒருவரை பஞ்சாயத்து தலைவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு நாளையொட்டி காயாமொழி பஞ்சாயத்து அலுவகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததை அப்பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் என்ற  வழக்குரைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்து பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரன் இருக்கையில் இருந்து ஆக்ரோசமாக எழுந்து படம் எடுத்தவரின் சட்டை கிழித்து தாக்குதல் நடத்தினர்.

-நப்பசலையார்