தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் இடையே ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவினை குறித்து பெண் காவல் உதவி ஆய்வாளரின் கணவர் புகார் அளித்ததை தொடர்ந்து இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த விக்னேஷ் என்பவர் 12 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவில் பணியாற்றி வருகின்றார். விக்னேஷ் இதற்கு முன்பு பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்தவர். அந்த சமயங்களில் காவல் நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் பெண் காவலர்களிடம் அவர்களின் செல்போன் எண்களை வாங்கி அவர்களிடம் தகாத உறவு கொண்டும், பலரை மிரட்டியும் அவரது ஆசைக்கு இணங்க வைத்ததாகவம் கூறப்படுகிறது. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் விக்னேஷ் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து தனி பிரிவில் இருந்து மாற்றப்படாமல் அதிலேயே பணிபுரிந்து வந்துள்ளார்.
தற்போது, ஒட்டப்பிடாரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருகின்றார். விக்னேஷ் தனிப்பிரிவு காவலராக வேலை பார்க்கும் ஒட்டப்பிடாரம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீ என்பவருடன் ஒரு வருடத்திற்கு மேலாக தகாத உறவு முறையில் இருந்து வந்துள்ளார். இதனை ஒட்டப்பிடாரம் காவலர்கள் மறைமுகமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க முயன்றுள்ளனர். அனால், தனி பிரிவில் இருக்கும் உட்சபட்ச அதிகாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பெண் உதவி காவல் ஆய்வாளரின் செல்போனில், அந்தப் பெண் உதவி ஆய்வாளருடன் விக்னேஷ் தனிமையில் இருக்கும் புகைப்படங்களும், ஆபாச வார்த்தையும் கூடிய மெசேஜ்களை விக்னேஷ் அருள்மொழிக்கு அனுப்பி உள்ளார். அந்த பெண் உதவி ஆய்வாளரும் அதனை ரசித்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் உதவி ஆய்வாளர் தனது பனி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது செல்போனில் விக்னேசும் அருள் மொழியும் தனிமையில் ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தையும், விக்னேஷ் அனுப்பிய ஆபாச மெசேஜை அழிக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து, அவரது கணவர் சதீஷ் அந்த அதனை புகைப்படங்களையும், ஆபாச மெசேஜ்களையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இதனை கேட்டு காவல் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீ மற்றும் அவரது கணவர் சதிஷ் இடையே பிக்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீயின் கணவர் சதீஷ் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரை காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததும் செல்போனில் பேசியதும் உறுதிசெய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீயை சூரங்குடி காவல் நிலையத்திற்கும் தனிப்பிரிவு காவலர் விக்னேசை மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு காவலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தனிப்பிரிவு காவலர் விக்னேஷ், சில அரசியல் பிரமுகர்களை நாடி தப்பிக்க முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே காவல் நிலையத்தில் தகாத உறவில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தனி பிரிவு காவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படாமல் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.