க்ரைம்

திருவிழாவில் ஆபாச நடனம்.. கிராம நிர்வாகி உட்பட மூவர் கைது!!

Malaimurasu Seithigal TV

திருவாரூர் அருகே, கிராமம் ஒன்றில் திருவிழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில், ஆபாசமாக நடனமாடியதற்காக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் கடந்த 23ந்தேதி நடைபெற்ற கோவில் திருவிழாவில் இரவில் ஆடல்பாடல் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. 

இதில் ஆடிய கலைஞர்கள் ஆபாசமாக ஆடியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து கோவை அம்மன்நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நடன கலைஞர் நல சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் இணையதளம் மூலம் புகார் செய்தார்.

இதில், நீதிமன்றம் உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட கோவிலில் நிர்வாககமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆபாச நடனம் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார், கிராம நிர்வாகி இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன்(65), நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கீழக்காடு கிராமத்தை சேர்ந்த கோபிநாத்(31), ஆபாச நடனம் ஆடிய நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(26) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்த போலீசார் மூவரையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.