சென்னை பிராட்வேயில் விளையாடச் சென்ற மூன்று சிறுவர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பிராட்வே பிடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சாய்கிரண்,(12) சாய்சரண்(12) ஆகிய இரட்டையர் மகன்கள் உள்ளனர் சிறுவர்கள் இருவரும் திராட்சையில் உள்ள சென்மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற இவர்கள் சக நண்பனான யூசுப் என்பவரின் மகன் அன்வர் என்ற சிறுவனுடன் விளையாடி உள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் பல இடங்களில் தேடி உள்ளார். சிறுவர்கள் கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த சிசிடிவி காட்சி வைத்து சிறுவர்களை தேடி வருகின்றனர். மேலும் சிறுவர்கள் மாயமானார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் மூன்று சிறுவர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.