க்ரைம்

பணம் பறித்த மூன்று போலி நிருபர்கள் கைது!

 ராமநாதபுரத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட 3 போலி நிருபர்களை போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

 ராமநாதபுரத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட 3 போலி நிருபர்களை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் நகரில் சில நாட்களாக 3 பேர் கடைகளுக்கு சென்று நிருபர்கள் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தனர். நேற்று அரண்மனை சாலை, சாலை தெருவில் ரூ.12,000 வசூல் செய்தனர். வழிவிடும் முருகன் கோயில் எதிரே தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் விற்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டினர்.

இதுதொடர்பாக அக்கடையின் உரிமையாளர் ஜவஹர் அலி புகாரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் நிருபர்களான பாண்டியூர் முருகன் 30, பெருவயல் வேல்முருகன் 26, கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பு ரூபசிலன் 51, ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டையை கைப்பற்றினர்.