க்ரைம்

பூட்டி கிடந்த புதுவீட்டில் கொலை! போலீஸ் விசாரணை!!!

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி புதுமனையில் பூட்டியிருந்த வீட்டில் பெண்ணின் உடல், அரை நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு இவரது மனைவி சுயம்பு கனி  4 குழந்தைகள் திருமணம் ஆகி சென்னையில் இருக்கின்றனர். கணவன் மனைவி ஆகிய இருவரும் உடன்குடியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அக்கம் பக்கத்தில் இடம் பேசி இருந்த சுயம்பு கனி நேற்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை வீடு பூட்டிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுயம்புகனி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதுஅக்கம் பக்கத்தினர் குலசேகரப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது சுயம்புகனி ரத்த வெள்ளத்தில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து நகைக்காக கொலை செய்யப்பட்டாரா இல்லை வேறு ஏதும் காரணமா என குலசேகரபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.