Arul Bakkiyam Teacher Arrested 
க்ரைம்

“மாணவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்த ஆசிரியர்” - வகுப்பறையில் கொடுத்த தொல்லை.. கேள்விக்குறியான பாதுகாப்பு?

பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணி என்ன...

Mahalakshmi Somasundaram

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சேவியர் பள்ளியில் பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அங்கு பணியாற்றி வந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேவியர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவனிடம், அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் 41 வயதுடைய அருள் பாக்கியம் என்பவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இதுதொடர்பாக மாணவருக்குத் தொடர்ந்து தொந்தரவு அளித்ததாகவும் வகுப்பறையில் மாணவனை தனியாக அழைத்து அழுத்தம் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் தொடர் தொல்லையால் அச்சமடைந்த மாணவன் ஆசிரியர் தன்னை ஓரினசேர்கைக்கு வற்புறுத்தியது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். பள்ளி மாணவன் அளித்த தகவல் மற்றும் பெற்றோரின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் அருள் பாக்கியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் அருள் பாக்கியத்தை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் மாணவனிடம் எவ்வாறு பழகினார், பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர் மீதே இத்தகைய புகார் எழுந்து, அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேவியர் பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.