க்ரைம்

மூளையை பயன்படுத்த முயற்சி... சோதனையில் சிக்கிய அறிவாளிகள்!! வலைவீசி தேடும் போலீஸ்

Suaif Arsath

திருச்சி கடவுச்சீட்டு அலுவலகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து கடவுச்சீட்டு பெற முயன்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விராச்சிலை சேர்ந்த ஆரோக்கியசாமி, கருங்குளம்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஷாக், வத்தனாகோட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய மூவரும்,கடவுச் சீட்டு பெறுவதற்காக திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களது சான்றிதழ்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் மூன்று பேரும் போலி சான்றிதழ் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனையறிந்த மூவரும் போலீசார் வருவதற்குள் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.