க்ரைம்

தவறி விழுந்த இருவர் பலி!!! எதிரபாரா விபத்தால் பரபரப்பு!!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்ராஜா (18). இவர் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்க்கிறார். இவர், தச்சுவேலை பார்க்கும் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆசிக் முகமது (18) மற்றும் லாரி ஓட்டுநர் மாரிச்செல்வம் (22) ஆகியோருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் முத்தையாபுரத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில்  எம்ஜிஆர் நகர்  மேம்பால இறக்கத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட 3 பேரில் விக்னேஷ்ராஜா சம்பவ இடத்திலேயும் மற்றும் ஆசிக் முகமது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்த மாரிச்செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தென்பாகம் போலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.