தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பட்டாண்டி விளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார்.. இவரது மனைவி ஜெபா வயலட் (25) இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டு லிங்கராஜ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் சுமூகமான உறவு இல்லாததால் அவரையும் விட்டு புரிந்துள்ளார்.
இந்த நிலையில் வயலட் தனது முதல் திருமண விவாகரத்து வழக்குக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்து போய் உள்ளார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி கட்டபொம்மன் நகரை சேர்ந்த பெத்தையா மகன் மாரிக்கனி (25) என்பவரை தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில்(நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ளது) சந்தித்து அவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.வயலட்டும் அடிக்கடி மாரிக்கனி வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். நேற்று முன்தினம் மாரிக்கனி, ஜெபா வைலட்டை தனது பிரையண்ட் நகர் 13வது தெருவில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். மது மயக்கத்தில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த மாரிக்கனி, ஜெபா வயலட்டை கட்டையால் தலையில் தாக்கி உள்ளார்.இதனால் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, கீழே விழுந்து அடிபட்டதாக நாடகமாடியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயலட் தன்னை தாக்கியது தன்னோடு பழகிய மாரிக்கனி தான் என வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதனை அடிப்படையாக கொண்டு தூத்துக்குடி காவலர்கள் அவரை ரிமாண்ட் செய்து செய்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வயலட் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாரிக்கனியை பேரூரணி சிறையில் அடைத்தனர். மாரிக்கனி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகவும், பிரபல ரவுடி என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்