தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் இந்திரா காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் 35 வயதுடைய சுமித்ரா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
எனவே சுமித்ரா அவரது கணவரை பிரிந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார். அப்போது சுமித்ராவிற்கு அப்பகுதியில் உள்ள ஆண்களுடன் தகாத உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அறிந்து ஆத்திரமடைந்த சுமித்ராவின் தம்பியான 27 வயதுடைய முத்துராஜா ஷவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுமித்ரா தொடர்ந்து தனது தகாத உறவை கைவிடாமல் இருந்து வந்திருக்கிறார்.
இதற்கிடையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு புளியங்குளத்தில் இருந்து வீட்டை காலி செய்து செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு வந்த இருவர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சுமித்ராவின் தம்பியான முத்து ராஜாவிடம் விசாரணை மேற்கொண்ட போது தனது அக்கா பலருடன் தொடர்பில் இருந்ததால் குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற அவரை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து போலீசார் முத்துராஜா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தம்பியே சொந்த அக்காவை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.