தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மனைவி 60 வயதுடைய பாக்கியம் . இவர்களுக்கு சுமதி என்ற மகளும் வேலுச்சாமி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியன் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம். அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சுப்பிரமணி தனது குடும்பத்துடன் கயத்தாறுக்கு குடிபெயர்த்துள்ளார். பின்னர் மகன் மற்றும் மகள் இருவருக்கும் திருமணமாகி மகள் அவரது கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் மகன் மற்றும் மருமகள் பேச்சியம்மாளுடன் சுப்பிரமணி பாக்கியம் தங்கியிருந்த நிலையில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் சுப்பிரமணி இறந்த நிலையில் வேலுசாமி அவரது தந்தையின் இளநீர் தொழிலாளை செய்து வந்திருக்கிறார் . அப்போது வீட்டில் இருந்த பேச்சியம்மாளுக்கு கே பகுதியை சேர்ந்த விவசாயி 42 வயதுடைய முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் பேச்சி அம்மாளுக்கும் முருகனுக்கும் இடையே இருந்த பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே இருவரும் தனிமையில் இருந்து வந்த நிலையில் இதனை அறிந்து ஆத்திரமடைந்த வேலுச்சாமி கடந்த 2023 ஆம் ஆண்டு முருகனை கத்தியால் கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றார்.
பின்னர் அந்த வழக்கில் ஜாமீனில் வந்த வேலுச்சாமி தனது அக்கம் சுமதி வீட்டில் வசித்து வந்த நிலையில் அக்காவிடம் தகராறில் ஈடுபட்ட வேலுசாமி அவரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இருப்பினும் தம்பி என்ற காரணத்தால் சுமதி அவர் மீது புகாரளிக்காத நிலையில் வேலுச்சாமியை மீண்டும் கயத்தாறு பகுதிக்கு அழைத்து வந்த அவரது தாய் பாக்கியம் தனியாக வீடு எடுத்து தங்கி மகனுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த வேலுச்சாமி குடிப்பதற்கு பணம் கேட்டு அவரது தாய் பாக்கியத்தை தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சுமார் 6 மணி அளவில் வேல்சாமி தனது தாயாரை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து கல் மற்றும் காய்கறி நறுக்கும் அருவாமனையால் முகம் மற்றும் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பாக்கியம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த கயத்தாறு போலீசார் பாக்கியத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கயத்தாறு போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேல்சாமியை கைது செய்ததுடன் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.