Tuticorin Priest Relationship Allegation 
க்ரைம்

‘என் புருஷனுக்கு தெரிச்சிடுச்சு’ பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த சர்ச் பாதிரியார்.. “ஆதாரத்துடன் கணவர்” - கையும் களவுமாக சிக்கியது எப்படி?

திருமணத்திற்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் யுனோக் வெளிநாட்டில் கப்பல் வேலைக்குச் சென்றுள்ளார்...

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கணவர் வெளிநாட்டில் கப்பல் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரது மனைவிக்கும் அப்பகுதி தேவாலயப் பாதிரியாருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் செல்போனைப் பார்த்தபோது பாதிரியாருடன் அவர் நெருக்கமாகப் பேசியது தெரியவந்ததாகக் கூறி கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிரியார் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் சிங்கித்துறை பகுதியைச் சேர்ந்தவர் யுனோக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் டெஸ்ஸியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் உள்ள செல்வ மாதா ஆலயத்தில் இருவரும் பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் யுனோக் வெளிநாட்டில் கப்பல் வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்கு கடந்த புதன்கிழமை (நவ 18) ஆம் தேதி ஊர் திரும்பிய அவருக்கு, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவியின் செல்போனைப் பார்த்தபோது, செல்வ மாதா ஆலயத்தின் பாதிரியாராகப் பணியாற்றி வரும் ஷிவாகருடன் அவர் திருமண உறவை தாண்டி நெருக்கமாகப் பழகி வந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் போனில் பேசி வந்ததும், இரவு நேரங்களில் வீடியோக்கள் பேசியதும் யுனோக்கு தெரியவந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட டெஸ்ஸி பாதிரியாருக்கு போன் செய்து “உங்க கிட்ட பேசினது எல்லாமே அவருக்கு தெரிஞ்சிடுச்சி.. இப்போ என் கிட்ட சண்டை போட்டு வெளில போய் இருக்காரு.. தப்ப பேசினது பழகினது எல்லாமே தெரிஞ்சிடுச்சி” என கூறியுள்ளார். அதற்கு பாதிரியார் ஷிவாகர் “எதுக்கு அவனை வெளிய விட்ட அவன் யார் கிட்டயாவது போய் சொன்ன என் மனமே போய்டும்.. நேரில் சந்தித்து பேசுனாதானே சொல்ல முடியும்.. எல்லாமே தெரிச்சிடுச்சா” என கேட்டிருக்கிறார்.

இதற்கிடையில் இது குறித்து அறிந்த ஊர்க்காரர்கள் யுனோக் பாதிரியார் மீது பழிசுமத்துவதாக நினைத்து அவரது வீட்டை அடித்து உடைத்திருக்கின்றனர். இது குறித்து யுனோக் ஊர் பெரியவர்களிடம் தெரிவித்த போது அவர்கள் பஞ்சாயத்து பேசலாம் என கூறியுள்ளனர். ஆனால் மூன்று நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் யுனோக் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாதிரியாரின் வீட்டிற்கு சென்று அவரிடம் பேச முயற்சித்துள்ளார். ஆனால் இவர்களை உள்ளே விடாததால் கதவை பலமுறை தட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிரியார் ஷிவாகருடன் இளம்பெண் பேசுவதாகக் கூறப்படும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.அதில், தங்களுக்குள் இருந்த உறவு கணவருக்குத் தெரிந்துவிட்டதாக இளம்பெண் கூறும்போது, தனது பெயருக்கும் மரியாதைக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகப் பாதிரியார் புலம்புவது போன்ற உரையாடல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் வெளிநாட்டில் கப்பல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவிக்கும் தேவாலயப் பாதிரியாருக்கும் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தொடர்பு மற்றும் அதுதொடர்பான புகார் குறித்து ஆறுமுகநேரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற புகார் எழுந்ததில் இருந்து பாதிரியார் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை குற்றமற்றவர் என நிரூபிக்க பாதிரியார் சபை முயற்சித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட யுனோக் நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்