க்ரைம்

“பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்த தவெக நிர்வாகிகள்” - வேலை வாங்கி தருவதாக கூறி அத்துமீறல்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி...

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.இவர் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபால். இவரும் தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகியாக உள்ள நிலையில் இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் “எங்களுக்கு மேலிடத்தில் நல்ல மதிப்பு உள்ளது அமைச்சர்கள் எல்லாம் எங்களுக்கு நெருக்கமானவர்கள் எனவே நாங்கள் உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறோம்” என கூறி பேசி பழகி வந்திருக்கின்றனர்.

இதனை நம்பி அந்த பெண்ணும் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு இருவரிடத்திலும் பணம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் வேலையை குறித்து பேச வேண்டும் என கூறி அந்த பெண்ணை இருவரும் சேர்ந்து காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடி பகுதியில் தனியார் விடுதியில் தங்க வைத்திருக்கின்றனர். பின்னர் சிறிது நேரம் வேலையை குறித்து பேசுவது போல ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.

மயக்கம் தெளிந்த இளம் பெண் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து உடனடியாக வீட்டுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து நடந்தது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண் அவர்களின் உதவியுடன் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை ஒரு கட்டமாக தனியார் விடுதியின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் இருவரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக பெண்ணை ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது. எனவே இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர் இளம் பெண்ணை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதி மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.